தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி குடவரை திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை போன்ற பூஜைகள் நடைபெற்றன.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. மேலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 5-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்