தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்ததால் வாலிபர் தற்கொலை
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்ததால் வாலிபர் தற்கொலை

By

Published : Oct 26, 2022, 4:01 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன். இவரது மகன் பூபதிராஜா வயது (28), டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், இவருக்கு ஆன்லைன் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதற்கு முன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமான பணத்தை இழந்த பூபதிராஜா கடந்த சில நாட்களாகவே சோகமாகவே இருந்துள்ளார். இதனால், பூபதிராஜாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பூபதிராஜா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அந்நேரத்தில் வீட்டுக்கு வந்த பூபதி ராஜாவின் தந்தை ராமலட்சுமணன் வீட்டின் முன்புறக் கதவைத் திறந்து பார்த்தபோது, பூபதிராஜா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் பூபதிராஜாவைப் பரிசோதித்துவிட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, தகவலின் பெயரில் வந்த குளத்தூர் போலீசார் உடலைமீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆண் நண்பருடன் பழகிய மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை

ABOUT THE AUTHOR

...view details