உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு, அங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (மே.24) மாலை 6 மணி நிலவரப்படி, 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 7.80 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவமனை, 2.50 மெட்ரிக் டன் தர்மபுரி அரசு மருத்துவமனை, 2.50 மெட்ரிக் டன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, 6.12 மெட்ரிக் டன் ராணிப்பேட்டை, காவேரி கார்போனிக்ஸ், 7.26 மெட்ரிக் டன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, 2 மெட்ரிக் டன் மதுரை, தோப்பூர் அரசு மருத்துவமனை என, 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.