மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த வசந்தி, கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் சமீபத்தில் இது குறித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு என்பது கற்பனைக்கதை' என்று கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
'ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு கற்பனைக் கதையா?' - வலுக்கும் கண்டனங்கள்!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு கற்பனைக்கதை என்று கூறியதற்கு முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்கவேண்டுமென ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
முன்னதாக, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்த விவரத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று முதலமைச்சர் கூறியதே ஏற்க முடியாத துயரமாக உள்ளது. அப்படி இருக்கையில் துப்பாக்கிச்சூடு குறித்த இவரது கருத்து மிகவும் வருந்தத்தக்கது. ஆகவே முதலமைச்சர் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை கைது செய்து சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகும் மக்கள் நலப்பணிகளில் அந்நிறுவனம் ஈடுபடுவதாகக்கூறி லஞ்சம் கொடுத்து வருகிறது. ஆகவே இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி போராடுவோம் என்றார்.