தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சிக்கு வரும் என்பது மக்கள் நம்பிக்கை - ஸ்டாலின்! - dmk

தூத்துக்குடி: திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு அதிகம் உள்ளது என ஒட்டப்பிடாரம் தேர்தல் பரப்புரையில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வரும் என்று மக்கள் நம்பிக்கை - ஸ்டாலின்

By

Published : May 2, 2019, 2:37 PM IST

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை முத்தையாபுரம், ஸ்பிக் நகர் பகுதியில் விவசாயிகள், பொது நல சங்க நிர்வாகிகள், உப்பளத் தொழிலாளர்கள் உள்பட பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசும்பொழுது, "வருகிற 19ஆம் தேதி ஒட்டபிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். தேர்தல் எனும்போது வாக்குக்கேட்டு கடமைக்காக வந்தவர்கள் அல்ல. மக்களுக்கு சேவை செய்யும் ஆட்சிப் பொறுப்பில் திமுக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக என்றுமே குரல் கொடுக்கக் கூடியவர்கள்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு இன்று பிறப்பித்த சட்டங்கள் எல்லாம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக ஆட்சியை காப்பாற்றி வருகிறது. எனவே, திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல, 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் திமுக‌தான் வெற்றி பெறப்போகிறது என்பது சந்தேகமில்லை. ஆகவே, இந்த ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்றே மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதை தடுக்கும் வண்ணம் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்துள்ளேன். ஆகவே மீண்டும் இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காகவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

இந்தமுறை திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு அதிகம் உள்ளது. அதிமுக ஆட்சியாளர்கள் குளத்தைக்கூட தூரவார முன் வரவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மத்தை கண்டறிய வேண்டும் என அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆகவே அதிமுக வாக்காளர்களும் திமுகவுக்கு ஆதரவு தர தயாராக உள்ளனர் " என்றார்.

ABOUT THE AUTHOR

...view details