தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதி: இலங்கைக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

தூத்துக்குடி: கரோனாவுக்கு பயந்து உரிய அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைய முயன்ற இந்தியர்களை இலங்கை கடற்படையினர் திருப்பி அனுப்பினர்.

Sri Lankan Navy sends back Indians
இலங்கைக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள்

By

Published : May 5, 2021, 9:46 PM IST

இந்தியாவில் இருந்து தமிழ்நாடு கடழ்நாடு கடலோர பகுதி வழியாக இலங்கைக்கு இந்தியர்கள் நுழைய முயன்றதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, இலங்கை கடற்படை கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு கடலோர பகுதிகளில் இருந்து 11 படகுகளில், 86 மீனவர்கள் இலங்கைக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஏற்கனவே, கடலோரத்தில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பை பலப்படுத்தியிருந்த நிலையில், அந்நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் சட்ட விரோதமாக நுழைந்தால் இலங்கையில் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் இலங்கை கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு ரத்து: திமுக அரசு மேல்முறையீடு செய்ய வைகோ வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details