குஜராத் மாடலை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி:சி.ஐ.ஐ. எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய அளவிலான உப்பு மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. உப்பு உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "ஆண்டுக்கு 300 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்து உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா விளங்குவதாகவும், ஒட்டுமொத்த உற்பத்தியில் குஜராத்து 79 சதவீதமும், தமிழ்நாடு 10 சதவீதமும், ராஜஸ்தானில் 9 சதவீதம் உப்பு உற்பத்தி நடைபெறுவதாக தெரிவித்தார்.
உப்பு உற்பத்தியில் தமிழகம் 2-வது இடம் பெற்றாலும், குஜராத் மாநிலத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் உற்பத்தி அளவு மிகக் குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் உப்பு உற்பத்தி என்ற தமிழக அரசின் தொலைக்கு திட்டத்தை அடைய, உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான கருத்துகளை மாநாட்டில் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
இலக்கை அடையத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு தரப்பில் வழங்கப்படும் என்றும், குஜராத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பங்களை கற்று தமிழகத்தில் உப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும்” என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இன்குபேட்டர் மூலம் பாம்பு வளர்ப்பு.. இளைஞரின் வைரல் வீடியோ!