தூத்துக்குடி:திருச்செந்தூர் உள்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மேற்பார்வையில் திருச்செந்தூர் நகரப்பகுதிகளில் காவல் துறையினர் இன்று (ஜூன் 22) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்செந்தூர் தாலுகா சாலை, அழகர் லாட்ஜ் முன்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் இரண்டு கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸ் (Ambergris) எனப்படும் திமிங்கலத்தின் வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர் இருந்தது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும். இது இந்தோனோசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடி ரூபாய் மதிப்புடையது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.