தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த ஆலையில் பணியாற்றிய 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து: காயமடைந்த இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் அனுமதி - thoothukudi district news
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து காயமடைந்த இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் அனுமதி
இதில், தேவசகாயம், காளியப்பன் ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து: சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்