தமிழ்நாடு அரசு சார்பில், தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் மே 25ஆம் தேதி முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பணிகள் செப். 30ஆம் தேதியோடு நிறைவடைந்தன.
இதற்கிடையில் அங்கு 4 முதுமக்கள் தாழிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள், நெல்மணிகள், அரிசி, மனித எலும்புக் கூடுகள், பற்கள் என 500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.