தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட விக்டோரியா சாலையில் தி சென்னை சில்க்ஸ் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் பின்புறம் மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கென தனியாக கட்டடம் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் தூத்துக்குடி தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் கட்டியுள்ள வணிக வளாகம் கட்டட அனுமதிக்கு மாறுதலாகவும், அனுமதியின்றி கூடுதலாக கட்டடம் கட்டியுள்ளதாகவும் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
தி சென்னை சில்க்ஸ் வணிக வளாகத்திற்கு சீல் - Corporation action
தூத்துக்குடி: அனுமதியை மீறி இயங்கிவந்த தி சென்னை சில்க்ஸ் வணிக வளாக கட்டடத்திற்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
Sealed for The Chennai Silks shopping mall in Thoothukudi
இந்நிலையில் தொடர்ச்சியாக நிறுவனம் இயங்கி வரவே, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, நகர் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தி சென்னை சில்க்ஸ் வளாகத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.