தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி பள்ளி அருகே உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல், இன்று (நவ.29) காலை மாணவி பள்ளிக்குச் செல்லும் போது, மாணவிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவி உடன் படிக்கும் சக தோழி பேசாத காரணத்தினால் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல்-help@snehaindia.org நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028
இதையும் படிங்க:பழனி முருகன் கோயிலில் இன்று ரோப் கார் சேவை கிடையாது.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!