தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரம் வளர்ப்போம்! சுற்றுச்சூழல் காப்போம்! - environment

தூத்துக்குடி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

சுற்றுச்சூழல்

By

Published : Jun 5, 2019, 3:16 PM IST

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி சுரேஸ் விஸ்வநாத் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான வழக்கறிஞர்களும், வனத்துறையினரும் கலந்துகொண்டனர்.

மரம் வளர்ப்போம் சுற்றுச்சூழல் காப்போம்

விழாவின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை நீதிபதி சுரேஸ் விஸ்வநாத் கூறும்போது, ‘இன்று உலக சுற்றுச்சூழல் தினம் என்பதைவிட மரங்களின் பிறந்தநாள் என்றே சொல்லலாம். மரங்களுக்கும் மனிதனைபோல் உயிர் உண்டு.

அவைகளுக்கு சுவாசிக்க நல்ல காற்று, மழை தேவை. உரிய முறையில் மரக்கன்றுகள் நட்டு மரங்களை வளர்த்தால் மட்டுமே இயற்கை சூழல் நன்றாக இருக்கும். மனித இனமும், விலங்கினங்களும் உரிய சுவாசம் பெற்று நல்ல முறையில் வாழ்வதற்கு மரங்கள்தான் நமக்கு துணைபுரிகின்றன’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details