தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! - tobacco

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

By

Published : Oct 15, 2020, 11:17 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பண்ணைத்தோட்ட தெருவில் உள்ள கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அத்தகவலின்பேரில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவைத் தொடர்ந்து, கோவில்பட்டி கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவல் துறையினர் பண்ணைத்தோட்ட தெருவில் உள்ள பலசரக்கு கடையில் சோதனையிட்டனர்.

இதில், அரசால் தடைசெய்யப்பட்ட ஆயிரத்து 230 கிலோ போதை, புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு நான்கு லட்சம் ரூபாயாகும்.

இது குறித்து கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பாலமுரளிராஜ் என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details