தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கனிமொழி!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரண உதவித்தொகையை மக்களவை உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்
ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

By

Published : Jun 5, 2021, 1:14 PM IST

Updated : Jun 5, 2021, 1:44 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கலவரத்தில் பாதிக்கப்பட்டோர்மீது போடப்பட்ட வழக்குகளை முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவையடுத்து வாபஸ் பெறப்பட்டது‌. இதில் காவல் துறையால் வழக்குத்தொடுக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிவாரணத் தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்
துப்பாக்கிச் சூடு கலவரத்தில் கைதாகி சிறையிலேயே உயிரிழந்த நபரின் தாயாருக்கு நிவாரண உதவித் தொகையாக ரூபாய் இரண்டு லட்சத்தையும் கனிமொழி வழங்கினார்.

இதையும் படிங்க: இதுவே முதல்முறை; டெல்லியில் நடக்கும் பண்பு மாற்றம்' - ரவிக்குமார் எம்பி

Last Updated : Jun 5, 2021, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details