தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

கோவில்பட்டி அருகே சிறுமி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

By

Published : Aug 19, 2022, 8:46 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பாரதிநகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (42), கடம்பூர் ரோட்டில் ஹோட்டல் வைத்து தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி சாந்தி (35), இவர்களது மகள் லெட்சுமிபிரியா (15), தாழையூத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி கீழபஜாரில் பழக்கடை ஒன்றில் சாந்தி பழரசம் பார்சல் வாங்கி வீட்டில் வைத்து லட்சுமிபிரியா உடன் குடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மாலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருவரும் கயத்தாறிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்னர் 13 மற்றும் 14-ம் தேதி கோவில்பட்டி தனியார் மருத்துவமனையிலும், 15 மற்றும் 16 தேதிகளில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் 17-ம் தேதி மேல்சிகிச்சைக்காக 2 ஆம்புலன்ஸ்களில் சென்னை அப்போலோ செல்லும் போது லட்சுமிபிரியா இறந்தார்.

அதன்பின்னர் 2 ஆம்புலன்ஸ் திரும்பிவந்தது. சாந்தி நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த லட்சுமிபிரியா உடல் பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தாய், மகள் வாங்கி கொடுத்த பழரசத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், லட்சுமிபிரியா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கயத்தார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். உயிரிழந்த மாணவியின் தந்தை மகாலிங்கம் கூறுகையில், தனது மனைவி, மகள் இருவரும் வாங்கி அருந்திய பழரசத்தில் விஷம் கலந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம், போலீசார் சரியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருச்சூர் போன திருச்சி யானை... ஆசியாவின் மிக உயரமான யானையின் அறியப்படாத சரித்திரம்

ABOUT THE AUTHOR

...view details