தூத்துக்குடி: விளாத்திகுளம் அச்சங்குளம் வைப்பாற்றை சேர்ந்தவர் சைவைத்துறை (65). இவரது பேரன் மதன் (12). இவர்கள் இருவரும் நேற்று (ஏப்ரல் 15) மீன்பிடிக்க ஆற்றுக்கு சென்றுள்ளனர். ஆனால் இரவு வரை வீடு திரும்பாததால், குடும்பத்தினர் ஆற்றுப்பகுதிக்கு சென்று தேடியுள்ளனர். அப்போது அவர்களின் இருசக்கர வாகனம், மீன் பிடிக்க பயன்படும் தூண்டில், உள்ளிட்டவை கிடந்துள்ளது.
ஆற்றில் மீன்பிடிக்க சென்ற தாத்தா-பேரன் நீரில் மூழ்கி உயிரிழப்பு - etv news
விளாத்திகுளம் அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த தாத்தாவும், பேரனும் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் மீன்பிடிக்க சென்ற தாத்தா-பேரன் சடலமாக மீட்பு
இதுதொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், நீரில் மூழ்கி உயிரிழந்த தாத்தா, பேரனின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாசார்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: ரயில்வே ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தல்