தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு தரப்பில் ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச் சூடு குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்தை நேரில் விசாரிக்க வேண்டும் எனப் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வரும் 25ஆம் நடிகர் ரஜினிகாந்த் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஒரு நபர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.