தூத்துக்குடி: சிறுவர்கள், முதியவர்கள் பொழுது போக்க, காலை மாலை நடைப்பயிற்சி போன்றவற்றிற்காக நகரபகுதியில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. இதில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும். முதியவர்கள், பெண்கள் நடமாட வசதியாக சிமெண்ட் ரோடு, பூக்கள் பதித்த நடைப்பயிற்சி தளம் அமைக்கபட்டு, பயன்பாடு அதிகம் இருந்தும் சில இடங்களில் முறையாக பராமரிப்பின்றி பூங்காக்கள் புதர் மண்டி கிடக்கின்றன.
அந்த வகையில், தூத்துக்குடி மாநகரில் உள்ள டுவிபுரம் 9வது தெருவில் சிறுவர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவானது பல வருடங்களாக புதர் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது, என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாட சறுக்கு, நடைப்பயிற்சி மேற்கொள்ள சிமெண்ட் தரை தளம் போடப்பட்டுள்ளது. ஆனால், பூங்கா பராமரிப்பின்றி அவை அனைத்தும் பாழடைந்து காட்சியளிக்கிறது.