தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் மது விற்பனைக்குத் தடை - ஆட்சியர் அறிவிப்பு - டாஸ்மாக் மதுபானக் கடை

தூத்துக்குடி: வள்ளலார் நினைவுதினத்தை முன்னிட்டு வருகிற 8ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Prohibition of sale of liquor
Prohibition of sale of liquor

By

Published : Feb 6, 2020, 10:41 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் வள்ளலார் நினைவுதினத்தை முன்னிட்டு வருகிற 8ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தூத்துக்குடி மாவட்டத்தில் வள்ளலார் நினைவுதினத்தை முன்னிட்டு பிப்ரவரி எட்டாம் தேதியன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள் விதி எண் 2003 துணைவிதி 12 (1)ன் படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், எப்எல்2, எப்எல்3 உரிமத்திலுள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடத்துதல், மதுபானத்தைப் பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ETV ETV ETV 'தமிழ்நாட்டிலும் கொரோனாவா?' தேனியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details