தூத்துக்குடி:சாத்தான்குளம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவர் பால்பாண்டி (வயது 30). இவர் பிட்காயினில் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிட் காயின் முதலீட்டில் திடீரென சரிவைக் கண்டு 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த 26 ஆம் தேதி சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தபோது திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த காவலரை சக காவலர்கள் உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.