தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்! - tuticorin district news

தூத்துக்குடி: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரண பொருள்கள் அடங்கியத் தொகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

நிவாரண பொருள்
நிவாரண பொருள்

By

Published : May 30, 2021, 10:51 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக, திருநங்கைகள், ஏழை, எளிய மக்கள் உட்பட்ட 110 பேருக்கு அரிசி, காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ”கரோனா 2ஆவது அலையைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ஊரடங்கை, மேலும் ஒரு வாரக் காலம் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த காலம் மிகவும் சிரமமாக இருக்கும்.

இதனைப் பொறுத்துக் கொண்டு விதிமுறைகளை கடைப்பிடித்தால் தான் கரோனா வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, நம் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி, சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details