தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CCTV:மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனம் திருட்டு : போலீஸ் விசாரணை - குற்றச் செய்திகள்

தூத்துக்குடியில் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இருசக்கர வாகன திருட்டு
இருசக்கர வாகன திருட்டு

By

Published : May 18, 2022, 10:41 PM IST

தூத்துக்குடி: மேல அரசடி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் தங்கபெருமாள்; இவர் நேற்று முன் தினம் (மே 16) மனைவி பிரசவத்திற்காக இரவு தூத்துக்குடி டவுண், தாமோதர நகர் பகுதியில் தெய்வா நர்சிங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

மருத்துவமனை வாயிலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று, பின்னர் வெளியே வந்து பார்க்கையில் இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடனடியாக தெற்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இருசக்கர வாகன திருட்டு

மேற்படி காவல் துறையினர் மருத்துவமனையிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜவுளிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி புதிய துணிகள் வாங்கிய ரவுடிகள் - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details