தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (30). இவரை காரில் கடத்திச் சென்ற கும்பல் கொலை செய்தது. இந்தக் கொலை சம்பவத்திற்கு, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் முழு உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.
இளைஞர் கொலை வழக்கு: உடந்தையாக இருந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்! - இளைஞர் கொலை வழக்கு
தூத்துக்குடி: தட்டார்மடம் அருகே இளைஞர் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்
இதையடுத்து, ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்பட 6 பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: இளைஞரை கொன்ற வழக்கில் 5 நபர்களுக்கு ஆயுள் தண்டனை