தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களிடம் அத்துமீறும் போலீசார்... சிசிடிவி காட்சியால் பரபரப்பு..! - அத்துமீறும் போலீசார்

தூத்துக்குடி: ஊரடங்கை அமல்படுத்த அத்துமீறலில் ஈடுபடும் காவல்துறையினரின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களிடம் அத்துமீறும் போலீசார்
மக்களிடம் அத்துமீறும் போலீசார்

By

Published : Apr 14, 2020, 9:16 PM IST

தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. தூத்துக்குடி அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர். தற்போது, பெரியசாமி பூபாலராயபுரம் மார்க்கெட் பகுதியில் காய்கறி கடை அமைத்து நடத்தி வருகிறார்.

கரோனா ஊரடங்கு காரணமாக அரசு காட்டிய வழிமுறைகளின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை கடை திறந்து வியாபாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று கடையை திறந்து பெரியசாமி வியாபாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில், அவ்வழியாக காலை 8 மணி அளவில் ரோந்து பணி மேற்கொண்ட தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் என்பவர் திடீரென தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்தி பெரியசாமியை ஒருமையில் அழைத்துள்ளார்.

பக்கத்தில் வந்த பெரியசாமியை உதவி ஆய்வாளர் சுந்தரம் தன்னிடமிருந்த லத்தியால் திடீரென சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். இதனால் பெரியசாமியின் தோள், முதுகு ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "வடபாகம் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சுந்தரம் என்பவர் நேற்று காலை காலை 8 மணி அளவில் எனது கடை அருகே ரோந்து வந்தார். அப்போது என்னை ஒருமையில் அழைத்தார். அவர் அழைத்ததன் காரணம் தெரியாமல் அருகே சென்ற எண்ணை எந்த காரணமுமின்றி திடீரென லத்தியால் அடிக்கத் தொடங்கினார். எதற்காக அடிக்கிறீர்கள்? என்ன தவறு செய்தேன் என கேட்டதற்கு என்னிடமே கோபப்படுகிறாய் எனக்கேட்டு மாறி மாறி லத்தியால் தாக்கினார்.

மக்களிடம் அத்துமீறும் போலீசார்

தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் முகக் கவசம் அணிந்து நான் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தேன். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் சுந்தரம் என்னை எதற்காக அடித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. 144 தடை உத்தரவை தீவிரமாக கடைபிடிக்கும் பொருட்டு காவல்துறையினர் பணியாற்றி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் பொதுமக்களைச் இழிவுபடுத்தும் வகையில் அடித்து துன்புறுத்துவதற்கு எந்த அதிகாரியும் உத்தரவிடவில்லை. உதவி ஆய்வாளர் சுந்தரம் நடந்துகொண்ட விதம் வருத்தமளிக்கிறது" என்றார்.

உயர் அலுவலர்கள் பொது மக்களிடையே கனிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தும் இதுபோன்ற சில காவல் அலுவர்களினால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதற்கு உயர் அலுவலர்கள் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details