தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ரூ.2.30 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல்! - Ambergris worth Rs 2 crore seized in Tuticorin

தூத்துக்குடி அருகே சட்ட விரோதமாக 2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான அம்பர்கிரிஸ் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 17, 2023, 11:43 AM IST

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை உடன்குடி வாரச்சந்தை பகுதியில் ரோந்து சென்றுச் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சிவமுருகன் மகன் குமரன் ( வயது 38), என்பது தெரியவந்தது. மேலும் அவர், வாசனை திரவியம் மற்றும் நறுமணப்பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரான அம்பர்கிரிஸை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குமரனை பிடித்த போலீசார் அவரிடம் இருந்த அம்பர்கிரிஸை பறிமுதல் செய்து திருச்செந்தூர் வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தூத்துக்குடி வனக்கோட்ட அலுவலர் அபிஷேக் தோமர் அறிவுறுத்தல்படி, திருசெந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு, குமரனை கைது செய்தார்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, "குமரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அம்பர்கிரிஸின் மொத்த எடை 2.560 கிலோ என்பதும் அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.30 கோடி இருக்கும். கடந்த ஆண்டு அக்டோபர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் 16 கிலோ எடை கொண்ட அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 3-வது முறையாக அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினர்.

இதையும் படிங்க: தம்பதியிடம் ரூ.60 லட்சம் வழிப்பறி.. 4 இளைஞர்களை அலேக்கா அள்ளிய போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details