தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் கோவில்பட்டி முதல் மீளவிட்டான் வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளுக்கு சரள்மண் தேவைப்படுகிறது. இதற்காக கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள கண்மாய்களில் உரிய அனுமதி இல்லமால் இரவு-பகல் என்று பாராமல் தொடர்ச்சியாக சரள் மண் அள்ளிப்பட்டு வருகிறது.
சரள்மண் கொள்ளையர்களை கண்டித்து வித்தியாசமான முறையில் கோரிக்கை மனு! - தூத்துக்குடி
தூத்துக்குடி: ரயில்வே பணிக்காக கோவில்பட்டி பகுதியில் சரள்மண் அள்ளப்படுவது தடுக்க கோரி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைதலைவர் அய்யாலுச்சாமி வித்தியாசமான முறையில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விவசாய பயன்பாட்டிற்காக விவசாயிகள் கண்மாய்களில் மண் அள்ளினால் அவர்களுக்கு, அரசு அலுவலர்கள் 50ஆயிரம் முதல் 1லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். ஆனால் இரவு-பகலாக சரள் மண் கொள்ளைபடிப்பவர்கள் மீது அரசு அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்படுவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவர் அய்யாலுச்சாமி தெரிவித்தார்.
மேலும் சரள் மண் கொள்ளை போவதை தடுக்கவும், அதற்கு துணையாக செயல்படும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை அடங்கிய மனுவினை தேங்காய், பூ, பழம், ஊதுபத்தி, கற்பூரம் என பூஜைப்பொருள்களை தாம்பூலத்தில் வைத்து கோஷமிட்டு கொண்டே கோவில்பட்டி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் அளித்தார்.இதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.