அந்த மனுவில், 'தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை சட்டத்திற்கு எதிராக இயங்கியது. இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி அமைதியான முறையில் மக்கள் போராடினர். காவல் துறையினர் எந்த தேவையும் இல்லாமல் போராட்டத்தை நசுக்கும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
'துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்க..!' - ஸ்டெர்லைட்
நாகர்கோவில்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தி 14 பேரை சுட்டு படுகொலை செய்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் பால்ராஜ் புகார் மனு அளித்தார்.
சிபிஐ(எம்எல்) மாவட்ட செயலாளர் பால்ராஜ்
காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மொத்தம் 15 பேர் இதில் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.