தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் 274 ஆழ்துளை கிணறுகள் மூலம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மாநில அரசு அனுமதி அளித்தால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டு தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். டெல்டா பகுதி விவசாயத்திற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். திமுகவுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி - அன்புமணி ராமதாஸ் கண்டனம் - Hydrocarbon project
தூத்துக்குடி: டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு முதற்கட்டமாக அனுமதி அளித்த மத்திய அரசை கண்டிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
அதன் காரணமாகத்தான் திமுக தலைவர் ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து மூன்றாவது அணி அமைப்பதற்கு விதை போடுகின்றனர். நல்லக்கண்ணு மற்றும் கக்கன் வாரிசுகளுக்கு 23ஆம் தேதிக்கு பின் நிச்சயம் வீடு வழங்கப்படும் என துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். அவர்கள் வசித்து வந்த வீடு பழுதடைந்த நிலையில் இருப்பதால்தான் நல்லக்கண்ணு மற்றும் கக்கன் வாரிசுகள் வசித்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்" என்றார்.