தூத்துக்குடி:திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 29) சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தென் மாவட்டங்கள் வளர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என போராடியும், பல வகையில் அழுத்தங்கள் கொடுத்ததன் காரணமாக 2000 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை தொடங்கினர்.
இதன் மூலம் அதிகப்படியான மக்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வளர்ச்சி அடையவில்லை. இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 25 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்கின்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை எனவும்” அவர் கூறினார்.
ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு அதிக பாதிப்பு கொடுக்கிறது என்எல்சி:“நெய்வேலியில் நடந்த போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவான ஒரு போராட்டம், அவருடைய உரிமைகளை பெறுகின்ற வகையில் போராட்டம் நடத்தியதற்கு காவல் துறையை ஏவி விட்டு ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் விவசாயிகளுக்கு எதிரான ஒரு போக்கு அன்று கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்த காரியத்தால் அவர்கள் ஆட்சி அகற்றப்பட்டது. நெய்வேலியில் நடப்பது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கு, தமிழ்நாட்டிற்கு எதிரானது” என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “விவசாயத்தை அழித்துவிட்டு நிலங்களை அழித்தால் வளர்ச்சி வந்து விடுமா என கேள்வி எழுப்பிய அவர், என்எல்சிக்காக நிலங்களை கையகப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும். நேற்று பார்த்தது ஒரு சாம்பிள் தான், இதற்கு பின்பு தான் இருக்கிறது, மண்ணுக்கும், மக்களுக்கும் போராடுவதற்கு நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். நாங்கள் சொன்னால் என் பின்னாடி கோடிக்கணக்கான இளைஞர்கள், விவசாயிகள் உள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அப்பகுதி மாசு ஏர்பட்டதையடுத்து கடுமையான போராட்டத்திர்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு என்எல்சி அதிக பாதிப்பு கொடுக்கிறது. என்எல்சி நிலம் கையக்கப்படுத்தினால் இரண்டு மூன்று ஆண்டுகளில் அரிசி 500 ரூபாய்க்கு கிடைக்கப் போகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் நிலத்தை அழித்ததால் தனக்கு கண்ணீர் வந்தது என்றும், சோறு கிடைக்காது என்று நீதிபதி கூறியும் இன்று மறுபடியும் வேலையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தரிசு நிலத்திற்காக போரடிய அண்ணாமலைக்கு இங்கு என்ன பிரச்சனை:நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதற்கு ஒரு மாநாட்டை ஜி-20 சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நடத்துகிர நிலையில் பக்கத்தில் 150 கிலோ மீட்டரில் நிலக்கரிக்காக நிலங்களை அழிக்கிற நோக்கத்தோடு திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.