தூத்துக்குடி:தூத்துக்குடி புன்னைக்காயலில் நடந்த விபத்தில் உயிரிழந்த கப்பல்மாலுமியின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சத்திற்கானக் காசோலையை தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (நவ.8) வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் அருகே அக்.31 ஆம் தேதி இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் கப்பல் மாலுமிகளான புன்னக்காயலை சேர்ந்த அலெக்சாண்டர்(35), லசிங்டன்(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த வசந்தன் ப்ரீஸ் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இவரது தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவருக்கு ஒரு லட்ச ரூபாயும் என முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படுவதாக கூறியிருந்தார்.
நிவாரணம் அளிப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று விபத்தில் உயிரிழந்த லசிங்டன், அலெக்ஸ்சாண்டர், வசந்தன் ப்ரீஸ் ஆகியோரின் குடும்பத்தினரை புன்னைக்காயலில் உள்ள அவரது இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்த தலா ரூ.2 லட்சத்திற்கானக் காசோலையை வழங்கினார். அதே விபத்தில் காயமடைந்து ஆத்தூரில் உள்ள ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜன் அவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, விரைந்து குணமடைய வாழ்த்தினார்.