தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம்!

By

Published : May 12, 2021, 5:45 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை எட்டு விழுக்காட்டினர் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சுணக்கம்
தூத்துக்குடியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சுணக்கம்

தூத்துக்குடி: மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி துடிசியா மையத்தில் இன்று (மே.12) நடத்தப்பட்டது.

இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால்தான் மாவட்டத்தில் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது.

சென்னையில் மொத்தம் 53 விழுக்காட்டினர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெறும் எட்டு விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் பரவலாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு போதுமான அளவு மருத்துவ வசதிகளும், ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான படுக்கை வசதிகளும் உள்ளன. நோய்த் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்படாமலிருக்க அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கரோனா அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கரோனா குறித்த விழிப்புணர்வை வழங்க மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் ஆலோசனை மையத்தை அணுகி உரிய மருத்துவ முறைகளை வீட்டிலிருந்தே பெறலாம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details