மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சி ராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனக்கு திருமணமாகி 2011ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 2014ம் ஆண்டு இரண்டாவதாக ஆண் குழந்தை பெற்றெடுத்தேன். இதையடுத்து நானும், என் கணவரும் 28.04.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டோம்.
பின்னர் நாங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டோம். 05.08.2019 அன்று பரிசோதனை செய்ததில், நான் கருவுற்றிருந்து தெரியவந்தது. அதன் காரணமாக 26.02.2020ல் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவர்களின் கவனக்குறைவால் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்துவிட்டது. என் கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், குறைந்த வருமானத்தை கொண்டு இரண்டு குழந்தைகளை வளர்த்து வந்தேன். ஆனால், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதால், அதை பராமரிக்க வருமானம் இல்லை. எனவே அறுவை சிகிச்சையின் போது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.