தூத்துக்குடி: புத்தாண்டு தினத்தில் நினைவுக்கு வருவது வானவேடிக்கைகளும், இனிப்பு வகைகளும்தான். அதுவும் பாரம்பரிய இனிப்பு வகையாக இருந்தால் சொல்ல வேண்டியதில்லை புத்தாண்டை சிறப்பாக கொண்டாடலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பாரம்பரிய இனிப்பு வகையில் உள்ளன. அதில், இலங்கையை பூர்வீகமாக கொண்டு தூத்துக்குடி வந்த பாரம்பரிய வாழைப்பழ அல்வா இனிப்பு வகை வருடப்போக்கில் தென் மாவட்டங்கள் முழுவதும் பரவியது.
தமிழ்நாட்டில் அதிகம் விளையும் நாட்டு வாழைப்பழம், முந்திரி பருப்பு, நாட்டு சர்க்கரை, நெய் ஆகியவை கொண்டு செய்யப்படும் சுவை மிகுந்த ஊட்டச்சத்து இனிப்பு வகையாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த இனிப்பு வகை தூத்துக்குடியில் இயற்கையான முறையில் எவ்வித வேதிப்பொருளும் கலக்காமல் தயார் செய்யப்படுகிறது.