கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கடலைக்காரத் தெரு சந்திப்பில் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடமும், அதனருகே உள்ள தங்கம்மாள் கோயில் தெருவில் ஆண்களுக்கான பொதுக் கழிப்பிடமும் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுக் கழிப்பிடத்தை அகற்றினர்.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் திறந்தவெளியிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு மட்டுமின்றி, அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் முகம்சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். எனவே, இப்பகுதியில் உள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும்; ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும் எனவும்; சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், தங்கம்மாள் கோயில் தெருவில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் முதலமைச்சர் பழனிசாமி!!