தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, புதிய நீதிமன்ற கட்டடங்களின் திறப்பு விழா உள்ளிட்டவை இன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட நீதிபதி என்.லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தனர்.
விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசுகையில், “150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் தற்பொழுது இன்னும் ஸ்திரத்தன்மையுடன் விளங்குகிறது. ஆனால், சமீபத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் எதுவும் அவ்வளவு ஸ்திரத்தன்மையோடு இருப்பதில்லை. எனவே பொதுப்பணித் துறை அலுவலர்கள், வரும் காலங்களிலாவது ஸ்திரத்தன்மையுடன் பயனுள்ள வகையில் கட்டடங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
நீதிபதி பாரதிதாசன் பேசுகையில், ”குடும்பநல நீதிமன்றங்களில் தற்போது அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதித்துறை குடும்பநல நீதிமன்றங்களை அமைத்து வருகிறது.