தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு 3ஆவது மைல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 392 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 1500 முதல் 2000 பேர் வரை வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அவசர மருத்துவ உதவிக்கு வெகு தொலைவிலிருந்து தான் ஆம்புலன்ஸ் கிடைக்கிறது.
இது குறித்து காவலர்களின் குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட ஆம்புலன்ஸ் நிர்வாக மேலாளர் மூலமாக முதலுதவி சிகிச்சை உபகரணங்கள், மருத்துவ அலுவலர்கள் அடங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகனம் ஆயுதப்படை குடியிருப்பில் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.