தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவின் குழப்பமான ஆதரவு அதிமுகவிற்கு பயன் தராது - கனிமொழி எம்.பி - thoothukudi mp kanimozhi

பாஜகவின் குழப்பமான ஆதரவு எந்த வகையிலும் அதிமுகவிற்கு பயன் தராது என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.

பாஜகவின் குழப்பமான ஆதரவு அதிமுகவிற்கு பயன் தராது - கனிமொழி எம்.பி
பாஜகவின் குழப்பமான ஆதரவு அதிமுகவிற்கு பயன் தராது - கனிமொழி எம்.பி

By

Published : Feb 13, 2023, 11:44 AM IST

பாஜகவின் குழப்பமான ஆதரவு அதிமுகவிற்கு பயன் தராது - கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே அமலிநகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்கள் அஸ்வின், பிரசாத் குடும்பத்தினரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

தொடர்ந்து தோப்பூர் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் அஜய்குமார் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி கனிமொழி எம்பி நிதியுதவி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பதை முதலில் முடிவு எடுக்கட்டும் என்றும், யாருக்கு ஆதரவு என்பதே நீண்ட நாட்களாக குழப்பத்தில் உள்ளதால் அவர்களின் ஆதரவு கூட்டணி கட்சிக்கு எந்த வகையிலும் பயன்தராது என்றார்.

மேலும், ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை செய்து வருகிறது என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய பாஜக ஆதரவளிப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அவர், தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்காக போராடக்கூடிய திமுக ஆதரவளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தான் வெற்றி கிடைக்கும்" என தெரிவித்தார்.

மேலும், "இலங்கை - தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனையில் அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு காண வேண்டும் என
தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த ஆட்சிக் காலத்தில் அதற்கான முயற்சி எடுக்கப்பட்டது தற்போதாவது இருநாட்டு மீனவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: சர்வதேச அறைகலன் பூங்காவில் கனிமொழி எம்பி ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details