தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட சோலைராஜா - பேச்சியம்மாள் என்ற தம்பதியினர் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை சோலைராஜா - ஜோதியின் உடலை உடற்கூறாய்வுக்கு எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம், உயிரிழந்த சோலைராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி, 25 லட்சம் நிவாரணம், குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட புதுமண தம்பதியின் உடல்கள் ஒப்படைப்பு! - double murder body
தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே குளத்தூரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட புதுமண தம்பதியினர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
உடல்கள் ஒப்படைப்பு
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின், உடற்கூறு பரிசோதனை முடிந்து சோலைராஜா - ஜோதி இருவரது உடல்களும் இன்று மாலை சோலைராஜாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.