தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 13 பேரின் குடும்பத்திற்கு மேலும் ரூ.5 லட்சம் நிதியுதவி! - thoothukudi firing

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு கூடுதலாக தலா 5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 13 பேரின் குடும்பத்திற்கு மேலும் ரூ.5 லட்சம் நிதியுதவி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 13 பேரின் குடும்பத்திற்கு மேலும் ரூ.5 லட்சம் நிதியுதவி

By

Published : Nov 16, 2022, 12:40 PM IST

இதுகுறித்து தமிழக அரசு வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின்மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

மேற்படி அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் இன்று (16-11-2022) உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முல்லை பெரியாறு..15 மரங்களை வெட்ட அனுமதி கோரி தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு

ABOUT THE AUTHOR

...view details