தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கழுகுமலையில் ஆவின் பாலகத்தினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அதேபோல் துரைச்சாமிபுரம் மற்றும் கட்டாலங்குளத்தில் அரசு கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
‘பறவை காய்ச்சல், கொரோனா வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது’ - பறவை காய்ச்சல்
தூத்துக்குடி: பறவை காய்ச்சல், கொரோனா என எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழக - கேரளா எல்லையில் 26 இடங்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் எந்த விதமான பிரச்னையும் இல்லை. பறவைகாய்ச்சல், கொரோனா எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது. கோழி பண்ணைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. ஆகையால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா போன்றே பறவை காய்ச்சலுக்கும் தடுப்பு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்தாண்டு 43 கோடி ரூபாய் செலவில் 108 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார்.