அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றிய கழகத்தின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு கொடியேற்றி வைத்ததுடன் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.
இந்தத் தொடக்க விழாவில் கயத்தாறு அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாற்றுக் கட்சியினர் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த ஆட்சி 4 ஆண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. தற்போது தேர்தலை சந்திக்கின்ற நிலையில் இருக்கிறோம்.
ஜெயலலிதா சொன்ன சொல்லைப்போல 50ஆவது ஆண்டு விழா பொன் விழா கொண்டாடும் நேரத்தில் மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் அதிமுக ஆட்சிதான் நடைபெறும்” என்றார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதில் திமுகவின் நிலைப்பாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ”திமுக எப்போதும் இரட்டை வேடம்தான் போடுகிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை 2016இல் காங்கிரஸ் ஆட்சியில், திமுக அங்கம் வகித்தபோது தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று நீட் தேர்வைப் பற்றி இரட்டை வேடம் போடுகின்றனர்.