தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இவ்விழாவிற்கு வந்த தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சமுதாய வளைகாப்பினை தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் தீவிர விசாரணை - கடம்பூர் ராஜூ - சமுதாய வளைகாப்பு விழா
தூத்துக்குடி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இதில், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முன்னூறு கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு அரசின் சீதன பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டு மனை பட்டா 16 பேருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ’கருவுற்ற தாய்மார்களை பாதுகாப்பது, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்குவதுவரை வழங்கி இந்த அரசு பாதுகாப்புடன் செயல்படுகிறது. இதனோடு மகப்பேறு காலகட்டத்தில், குழந்தைகள் இறப்பு தடுக்கப்பட்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கு மருத்துவ சேவையில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.