தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு! - Minister Kadampur Raju Kovilpatti Program

தூத்துக்குடி: கயத்தாறு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடியில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு  அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி நிகழ்ச்சி  அமைச்சர் கடம்பூர் ராஜு  Minister Kadambur Raju initiated various projects in Thoothukudi  Minister Kadampur Raju Kovilpatti Program  Minister Kadampur Raju
Minister Kadambur Raju initiated various projects in Thoothukudi

By

Published : Feb 14, 2021, 9:10 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் ஆசூர் தளவாய்புரம் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா, ராஜாபுதுக்குடியில் ரூ.27 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையை திறந்து வைத்தல், ரூ.5.36 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைக்க அடிக்கல் நாட்டுதல்.

தலையால் நடந்தான்குளம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு, ரூ.64 லட்சம் மதிப்பில் தலையால் நடந்தான்குளம் முதல்வேம்பன்குளம் வரை தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மயிலோடையில் ரூ.5 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்.

பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு

முடுக்கெல்லாம் குளத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு, ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், காமநாயக்கன்பட்டி அம்மா மினி கிளினிக் திறப்பு விழா, வானரமுட்டியில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்.

கரடிகுளம் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா, வெங்கடேஷ்வரபுரம் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை திறந்து வைத்தல்.

கோவில்பட்டி ஒன்றியம் பாண்டவர் மங்கலத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு, ரூ.45 லட்சம் மதிப்பில் பசுவந்தனை முதல் மந்தித்தோப்பு வரை சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:அழகிரி குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின்தான் பதில் கூற வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details