தூத்துக்குடி:மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவருட்சிலைக்கு தமிழக அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோட்டாட்சியர் மகாலட்சுமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமூகநலன் மகளிர் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், ”போக்குவரத்தின் போது சில முட்டைகள் உடைந்து அழுகும் நிலை ஏற்படுகிறது. இம்மாதிரியான முட்டைகள் கண்டறியப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் கொடுக்கப்பட்டு மாற்றப் பட்டு வருகிறது இது தான் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.இம்மாதிரி 6இடங்களில் இல்லை 50 இடங்களில் கூட இருக்கலாம். இது எல்லா இடங்களிலும் நடைபெறுகின்ற வழிமுறைதான் அதுவும் மாற்றப்பட்டு வருகிறது. இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளேன். அவர் மண்டையில் தான் ஏறவில்லை ஏன் என்று தெரியவில்லை” என்று அண்ணாமலையின் புகாருக்கு பதிலளித்தார்.