தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டி அருகே கருப்பட்டி வியாபாரி படுகொலை! - merchant killed

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பனீக்கர்குளத்தைச் சேர்ந்த கருப்பட்டி வியாபாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால்  படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

merchant-killed-near-kovilpatti

By

Published : Apr 22, 2019, 1:43 PM IST

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் பனீக்கர்குளம் - ஆத்திகுளம் இடையே தரைப்பாலம் தடுப்பு சுவரில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கயத்தார் காவல்துறையினருக்கு நேற்று (ஏப்ரல் 21) நள்ளிரவில் தகவல் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று அந்த சடலத்தினை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்த நபர் பனீக்கர்குளத்தைச் சேர்ந்த பாண்டிராஜ் என்பவரது மகன் பாண்டி(25) என்பதும், அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இவர் கருப்பட்டி வியாபாரம் பார்த்து வந்துள்ளார். நேற்றிரவு வெளியே செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பிவில்லை என்று கூறுப்படுகிறது.

இதையடுத்து காவல்துறையினர் பாண்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவ இடத்தினை கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துவரும் காவல்துறையினர், இந்த கொலைக்கு முன்விரோதமா, தொழில் போட்டியா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details