தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 16, 2019, 2:53 PM IST

ETV Bharat / state

தொழிற்சாலைகளில் மாசு அளவை கண்காணிக்க நடவடிக்கை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: அம்மோனியா பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் மாசு அளவை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் 2ஆவது கட்டமாக கால்நடைகளுக்கு கோரிமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இதற்காக தேவையான மருந்துகள், தடுப்பூசிகள் ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 260 கால்நடைகளுக்கும் அடுத்த பத்து நாட்களுக்குள் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்.

தூர்வாரும் பணியை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 37 குளங்களில், 36 குளங்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு குளத்தில் பல்வேறு பிரச்னை காரணமாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதில் 28 குளங்களில் 100 சதவிகிதம் தூர்வாரும் பணி முடிவடைந்துவிட்டது. 10 குளங்களில் 70 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இந்த வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அநேக இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 473 ஊருணிகள், 87 சிறு பாசன குளங்கள் தூர் வாரும் பணி 85 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது.

தூத்துக்குடி நகர பகுதியில் அம்மோனியா வாயு கசிவினால் மக்கள் மூச்சுவிட சிரமப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அது குறித்து விசாரணை நடத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து தான் அமோனியா வாயு வெளியேறுகிறது என புகார் வந்திருந்தது.

ஆனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பராமரிப்பு பணிக்காக ஸ்பிக் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடியில் அமோனியா வாயு பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் கண்காணிக்கவும், காற்றில் உள்ள மாசுபாட்டு அளவை கண்காணிக்கவும் தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் காற்று உணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் தரவுகளை ஆய்வு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காற்றில் உள்ள மாசை குறைப்பதற்காக சாலையின் நடுவே அதிக மரங்கள் நடுவதற்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை - நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்

ABOUT THE AUTHOR

...view details