கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசனை அறிமுகம் செய்துவைத்தார்.
இக்கூட்டத்திற்குத் தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன், கோவில்பட்டி நகரச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் நகரச் செயலாளர் ராமர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கடந்த 10 ஆண்டு காலமாக எதையும் செய்யவில்லை. இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். ஆர்.கே. நகரில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியும். டிடிவி தினகரன் அந்த மக்களைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
பெண்களுக்கு 33 விழுக்காடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுக ஐந்து முறை ஆட்சியிலிருந்தபோது என்ன திட்டங்கள் செய்தது என்பதனைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளோம். அதனை டிடிவி தினகரன் வாங்கிப் படித்துப் பார்த்த பின்னர் கூற வேண்டும்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் அறிமுக விழா 7000 கோடி விவசாயக் கடன்களை திமுக தள்ளுபடி செய்துள்ளது. அரிசி வழங்கும் திட்டம், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் கருணாநிதி. ரூ.1000 தரப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது நிச்சயமாகத் தரப்படும். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:’234 அல்ல; எடப்பாடியில் வென்று காட்டுங்கள்’ - ஸ்டாலினுக்கு பழனிசாமி சவால்!