மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தூத்துக்குடி கடற்பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்தார். விர்கோ 9 என்ற சிறிய ரக சரக்கு கப்பலில் மறைந்திருந்த அவரை இந்திய புலனாய்வு, உளவுத்துறை அலுவலர்கள் மடக்கிப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து அகமது அதீப் குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சென்னை, டெல்லியிலிருந்து தூத்துக்குடி வந்த குடியுரிமை அலுவலர்கள் நேற்று முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் விசாரணை நடத்தினர்.
திருப்பி அனுப்பப்பட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் - மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப்
தூத்துக்குடி: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது உளவுத்துறை அலுவலர்களிடம் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பை இந்திய கடற்படையினர் மாலத்தீவு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
ahmed adeeb
அந்த விசாரணைக்குப் பின் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பை, அந்நாட்டு கடற்படையினரிடம் இந்திய கடற்படையினர் ஒப்படைத்தனர். அவர் வந்த கப்பலிலேயே திரும்ப அனுப்பப்பட்டார்.