தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபர் மகனை கடத்தியவர்களுக்கு ஆயுள் தண்டனை - child kidnapper

தூத்துக்குடி: பிரபல தொழிலதிபர் மகன் கடத்தல் வழக்கில் கார் டிரைவர் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

mahila court judgement

By

Published : Aug 13, 2019, 10:10 PM IST

தூத்துக்குடி பிரைன்ட்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பிரபல தொழிலதிபரான இவருடைய நான்கரை வயது மகனை கடந்த 17.8.2011 அன்று, காரில் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் வழியில் ராஜ்குமாரின்‌ கார் டிரைவர் பாலகருப்பசாமி அவருடைய நண்பர்களான மாரியப்பன் என்ற அசோக், மகேஷ், லெட்சுமி காந்தன், ஜெகநாதன் என்ற ஜெகன், முருகேஷ் ஆகியோரின் உதவியுடன் கடத்தினார்.

தொழிலதிபர் ராஜ்குமாரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.1 கோடி கேட்டு பணம் பறிக்கும் நோக்கில் சிறுவன் கடத்தப்பட்ட இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராஜ்குமார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலகருப்பசாமி, அவருடைய நண்பர்கள் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரசு வழக்கறிஞர் சுபாஷினி பேட்டி

இது தொடர்பான விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட பாலகருப்பசாமி மற்றும் அவருடைய நண்பர்கள் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா ரூ.5,000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details